இவர்தான் அக்க்ஷய் பிரம்மச்சாரி பாபர் மசூதி விவகாரத்தில் இசுலாமியர்களுக்காக குரல் கொடுத்த காந்தியவாதி.
இவர் பாபர் மசூதி பிரச்சினையை சட்டத்தின் மூலம் தீர்க்க அரும்பாடுபட்டார். ஆனால் அன்று நீதிபதியாக இருந்த நாயர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதை பிறகு தெரிந்துகொண்டார். பின்பு இவர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் இந்து மகாசபை ரவுடிகள் இவரை அடித்துத் துரத்தினர்.
ஆனாலும் அக்க்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதிலும் எடுத்து செல்லவும், பிரதமரிடம் கூட கொண்டு செல்லும் அளவுக்கு உறுதிகாட்டினார். அப்போதைய பிரதமர் நேரு இவரை லால் பகதூர் சாஸ்திரியை பார்க்க சொன்னார். உத்தரப்ரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரி அயோத்தியில் பிரச்சினை ஏதும் இல்லை என்று சட்ட சபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார்.
ஆனாலும் அக்க்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சிவரை இசுலாமியர்களுக்காக போராடினார் ஆனால் அவரால் நியாயம் பெற்று தர முடியவில்லை.
பாபர் பள்ளிவாசலை இடித்த கருப்பு தினம் (டிசம்பர் 6) நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் தருணத்தில் இம்மனிதரை நினைவுகூர வேண்டும்.
No comments:
Post a Comment