Vuvaisi - உவைசி பற்றி தெரிந்துகொள்வோம்:



முகநூல் நண்பர்கள் பலர் இவரை பற்றிய செய்திகளை அவ்வப்போது பதிவு செய்த வண்ணம் உள்ளனர். என் நண்பர்கள் வட்டத்திலிருந்து சிலர், இவர் யார்? எந்த மாநிலத்தை சார்ந்தவர்? என்ன பதவி வகிக்கிறார்? என்பது போன்ற கேள்விகள் கேட்டுகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதில் இந்த பதிவு.

இவர்தான் அஸதுத்தீன் உவைஸி. அண்டை மாநிலம் ஆந்திரத்தின் அரசியல் சிங்கம்.

அரசியல்வாதி என்றாலே அசிங்கம் என்றாகிவிட்ட சூழலில் அரசியலை தூரெடுத்து தூய்மை செய்ய போராடிக் கொண்டிருக்கும் உண்மையான போராளி. உண்மையிலேயே, மக்களுக்காகவே அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கும் மனிதர்.

இவர் ஆந்திர பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் மே மாதம் 13ஆம் தேதி 1969ல் சுல்தான் சலாஹுதீன் உவைசி என்ற அரசியல் பிரமுகருக்கு மகனாய் பிறந்தார். (இவருடைய தந்தை 6 முறை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). அஸதுத்தீன் உவைஸி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் B.A பட்டம் பெற்றார் பிறகு மேற்படிப்பிற்காக லண்டன் சென்றார் அங்கு LLB படித்து வழக்குரைஞரானார். இவரின் தந்தை தலைமை தாங்கி நடத்திவந்த அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அரசியல் கட்சியில் 2009ஆம் ஆண்டிலிருந்து தலைவராக இருக்கிறார். இவரை இவருடைய ஆதரவாளர்கள் நகீப்-இ-மில்லத்(சமூகத்தின்தலைவர்) என்று அழைக்கின்றனர்.

1994ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1999ல் நடந்த அடுத்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அதிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார். 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

கூடுதல் தகவல்:-
சமீபத்தில் எம்.பி-களின் பங்கேற்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மீனாட்சி நடராஜன் என்ற காங்கிரஸ் எம்.பி 85 சதவீத நாட்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். ஆனால் அவர் எழுப்பிய கேள்விகள் 135 தான் ஆனால் உவைசி 1042 கேள்விகள் கேட்டு சாதனை படைத்தார்.

No comments:

Post a Comment