ஐசன் வால்நட்சத்திரம் தப்பித்ததா?

ஐசன் வால்நட்சத்திரம் (COMET ISON; C/2012 S1) - சூரியனுக்கு மிக அருகாமை நிலையை (PERIHELION)நேற்றிரவு (நவம்பர் 28) அடைந்தது.

ஆரம்ப தகவல்கள் - சூரியனின் வெப்பமும், அதன் ஈர்ப்பு சக்தியும், ஐசன் வால்நட்சத்திரத்தை முழுமையாக அழித்துவிட்டதாக தெரிவித்தன.

தப்பிக்கவில்லை என வெளியான BBC செய்தி...



தப்பிக்கவில்லை என வெளியான FOXNEWS செய்தி...



இருப்பினும் - பின்னர் வெளியான படங்களும், தகவல்களும் - ஐசன் வால்நட்சத்திரம், குறிப்பிடும்படியான அளவில் தப்பித்திருக்கலாம் என தெரிவிக்கின்றன.

தப்பித்ததாக வெளியான டிவிட்டர் செய்தி...



ஐசன் வால்நட்சத்திரம் சூரியனின் வெப்பம், ஈர்ப்பை விட்டு வெளியில் வருவதாக காட்டும் காட்சி ...


வாஷிங்டன்: சூரியனை நோக்கி படு வேகமாக பாய்ந்து சென்ற ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்றிச் சென்ற பின்னர் மாயமாகி விட்டது. அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகிப் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை நெருங்கிய அடுத்த சில நிமிடங்களில் காணப்படவில்லை.
ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி ஆவியாகிப் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதேசமயம், சூரியனை நெருங்கி மாயமான பின்னர் ஐசானின் சிதறல் தப்பிப் பிழைத்துள்ளதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. இதனால் ஐசான் முழுமையாக பொசுங்கிப் போய் விட்டதா அல்லது அதன் சிதறலில் சில தப்பிப் பிழைத்ததா என்ற விவாதம் எழுந்துள்ளது..


சூரியனை நெருக்கத்தில் சுற்றிய ஐசான்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகே போய் அதைக் கடந்து செல்ல முற்பட்டது


கடந்த வேகத்தில் மாயமானது

ஆனால் சூரியனை கடந்த சில நிமிடங்களிலேயே அதைக் காணவில்லை. மாயமாகி விட்டது.

சிதறுண்டதாக விஞ்ஞானிகள் கருத்து

சூரியனைக் கடந்த அடுத்த சில விநாடிகளிலேயே ஐசான் சிதறுண்டு போனதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் பார்க்கவில்லை - நாசா

நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்துக் கூறுகையில், ஐசான் வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பின்னர் மீண்டும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகியிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிதறல் தப்பியதாக புதிய தகவல்

ஆனால் ஐசான் வால்நட்சத்திரம் முழுமையாக அழிந்து போகவில்லை. அதன் சிதறலின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், ஐசான் முழுமையாக அழியவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது

தப்பிப் பிழைத்த ஐசானின் பகுதியை மீண்டும் காண முடியும் என்ற நம்பிக்கையிலும் இவர்கள் உள்ளனர். இந்த சிதறல் தப்பிப் பிழைத்தது உண்மை என்றால் டிசம்பர் மாதத்திலும் ஐசானின் ஒரு பகுதியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

நாசாவின் ஐசான் வால் நட்சத்திரத்தைக் கண்காணிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த கார்ல் பாட்டம்ஸ் என்ற விஞ்ஞானியின் புதிய கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பெரிஹீலியனில் நுழைந்து மாயமான ஐசான் முழுமையாக அழியவில்லை. அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளது....

மிக மிகச் சிறிய துண்டு தப்பியது...

கார்ல் மேலும் கூறுகையில், நாசாவின் சோஹோ தொலைநோக்கியின் லாஸ்கோ சி2 கேமராவின் பதிவின்படி ஐசானின் மிக மிக சிறிய தூசி மண்டலத் துண்டு தப்பியுள்ளதாக நம்புகிறேன்.

மீண்டும் ஒளிர்கிறது

மேலும், லாஸ்கோ சி3 அனுப்பியுள்ள படங்களைப் பார்க்கும்போது மீண்டும் ஒளிப் பிரகாசமான பகுதியைக் காண முடிந்துள்ளது. இது ஐசானின் தப்பிப் பிழைத்த பகுதியாக இருக்கலாம் என்று நம்புகிறேன். நிச்சயம் இது ஐசானின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.

என்ன நடந்தது தெரியுமா...

சூரியனை நோக்கி வேகமாக பாய்ந்து வந்த ஐசான், சூரியனின் சுற்று வட்டத்தை நெருங்கியதும் மாயமாகிப் போனது. அதன் மிகப் பெரிய வால் பகுதியைக் காண முடியவில்லை. அது சுருங்கிப் பொசுங்கிப் போயிருக்கக் கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது.

ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே அதன் ஒரு பகுதியானது மீண்டும் வெளிப்பட்டதை லாஸ்கோ சி2 படம் காட்டுகிறது. எனவே ஐசானின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கிறது. அதாவது, ஐசானின் வால் மற்றும் கோமா பகுதி அழிந்து போயிருக்கலாம். ஆனால் அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கலாம்.

தப்பி்ப் பிழைத்த ஐசானின் குதியிலிருந்து தொடர்ந்து தூசு வெளிப்பட்டு வருகிறது. மேலும் அது ஒளிரவும் செய்கிறது. வாயுக்களும் வெளிப்பட்டுள்ளது.

அரை குறை உயிருடன்...

தப்பிப் பிழைத்த பகுதி குறித்து நமக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் கூட அரை குறை உயிருடன் ஐசான் இன்னும் இருப்பதாக நாம் சொல்ல முடியும். அதன் நியூக்ளியஸ் பகுதி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவில்லை. அதைப் பொறுத்துத்தான் அது தொடர்ந்து உயிர் பிழைத்திருக்குமா என்பதை கணிக்க முடியும். எவ்வளவு காலம் அது நீடித்திருக்கும் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மீண்டும் அதைப் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை.

ஆனால் ஒன்றுமே இல்லை என்று கூறுவதற்குப் பதில், ஏதோ கொஞ்சம் இருக்கிறது என்றுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்.. என்று கூறியுள்ளார் கார்ல்.

நாசாவின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 தொலைநோக்கியானது மொத்தம் 76 படங்களை அனுப்பியுள்ளது.
ஐசான் குறித்த உலகளாவிய பொதுவான கருத்து என்னவென்றால், கடும் வெப்பம் அதாவது கிட்டத்தட்ட 2600 டிகிரி சென்டிகிரேட் மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தி ஆகியவற்றின் காரணமாக ஐசான் வால்நட்சத்திரம் சிதறுண்டு போயிருக்கவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன.
பொறுத்திருந்து பார்க்கலாம்.. ஐஸ் துகள்கள் நிரம்பிய ஐசான் மீண்டிருக்குமா.. அல்லது மாண்டிருக்குமா என்பதை.




Thanks to: Source: Kayalpatnam.com & http://tamil.oneindia.in/news/international/comet-ison-vanishes-as-it-circles-the-sun-188454.html
http://www.kayalpatnam.com/shownews.asp?id=12434


No comments:

Post a Comment