மோடி குஜராத்தில் நிகழ்த்தியது சாதனைகளா?


 Source:https://www.facebook.com/photo.php?fbid=423872557714244&set=a.338690192899148.58865.100002745098707&type=1&theater

மோடியின் பொய்புரட்டுகளை பட்டியலிட்டார் நிதீஷ்குமார்......

இருதினங்களுக்கு முன்பு பாட்னா பொதுகூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி பல பொய்களையும்,வரலாற்று பிழைகளையும் உளறிகொட்டினார்.அதில் முக்கியமானவை சில.....

1)இந்திய அரசியல் இதிகாசத்தில் முக்கியபங்குவகித்தவர் சந்திரகுப்தர்.அவரை குப்தவம்சத்தை சேர்ந்தவர் என்று மோடி குறிபிட்டார்.ஆனால் சந்திரகுப்தர் மோரையா வம்சத்தை சேர்ந்தவர்.

2)உலகபுகழ்பெற்ற "தக்ஷ்ஷீலா"என்ற பல்கலைகழகம் பிகாரில் அமைந்துள்ளது பெருமைப்பட வேண்டியதாகும் என்று மோடி கூறினார்.ஆனால் "தக்ஷ்ஷீலா"அமைந்துள்ள இடம் பாகிஸ்தான்.

3)பிகாரிகளின் வீரத்தை பாராட்டிய மோடி உலகின் பல நாடுகளை கைப்பற்றிய மன்னன் சிகந்தர் இந்தியாவிற்கு படையெடுத்தபோது பிகாரிகள் கங்கைநதிக்கரையில் வைத்து அவரை மண்ணைகவ்வ செய்தனர் என்று குறிபிட்டார்.ஆனால் உண்மை என்னவெனில் சிகந்தர் பிகாருக்கு வருவதற்கு முன்பே பஞ்சாபில் போரஸ் என்பவருடன் போர்செய்து அவரை வெற்றி பெற்றார்.ஆனாலும் தோல்வியுற்ற போரசை மன்னித்து அவரை பஞ்சாபின் பொறுப்புதாரியாக நியமித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார்.சிகந்தர் பிகாருக்கு வரவேயில்லை.

4)நானும்,நிதீஷ்குமாரும் பிரதமர் அழைத்த விருந்தில் ஒரே டேபிளில் அமர்ந்து சாப்பிட்டோம் என்று மோடிகூரினார்.இதற்க்கு மறுப்பு தெரிவித்த நிதீஷ் மோடிஅலை என்பது எப்படி பொய்யோ அதேபோல் இதுவும் கடைந்தெடுத்த பொய்யாகும் என்று குறிப்பிட்டார்.

ஒரு பிரதமர் வேட்பாளராக தன்னை பிரபலபடுத்தி கொள்ளும் நபர் வரலாற்று மகத்துவங்களை இப்படி தவறாக பேசுவது அவரது பக்குவமின்மையை காட்டுவதாக நிதீஷ்குமார் கேளிக்கைசெய்தார்.

நமதுநாடு நான்குபுறமும் எதிரிகளால் சூழப்பட்டுள்ள நிலையில் மத அடிப்படையில் மக்களை பிரித்தாள முயற்சிக்கும் மோடி போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் அது மேலும் இந்தியாவை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

No comments:

Post a Comment